×

புதிய உச்சத்தை எட்டிய இந்திய பங்குசந்தை 

 

சமீப காலமாக தொடர் ஏற்றம் கண்டு வரும் இந்திய பங்கு சந்தை, இன்று சென்செக்ஸ் 80,370 புள்ளிகள், நிஃப்டி 24,300க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரிப்பதும், அமெரிக்காவின் பொருளாதார சரிவும் கடந்த 6 மாதங்களாக இந்திய பங்கு சந்தையை ஏற்றம் காண வைத்தது.  இந்த மாத இறுதியில் நடக்கவுள்ள யூனியன் பட்ஜெட்டிற்கு பிறகு இந்திய சென்செக்ஸ் மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் சென்செக்ஸ் 87000 புள்ளிகளை எட்டும் என்றும் கணித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பங்கு சந்தையானது புதிய உச்சத்தைத்தொட்டுள்ளது. அதன்படி நிஃப்டி 24399 புள்ளிகளிலும், அதே போல் சென்செக்ஸ் 80160 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. ஹெச்.சி.எல் டெக்னாலஜி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் லாபத்தை சந்தித்தது குறிப்பிடதக்கது.