மாமல்லபுரத்தில் தொடங்கியது சர்வதேச காத்தாடி திருவிழா
Aug 15, 2024, 19:15 IST
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடித் திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கியுள்ளது.
செங்கல்பட்டு, திருவிடந்தை கடற்கரை பகுதியில் நடக்கும் 3வது சர்வதேச பட்டம் விடும் திருவிழா இன்று தொடங்கியது. இதனை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் விழாவில் தாய்லாந்து, வியட்நாம், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, மலேசியா நாடுகளில் இருந்து ராட்சத காற்றாடியை பறக்கவிட கலைஞர்கள் வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு 150 காற்றாடியை பறக்கவிட்ட நிலையில் இந்த ஆண்டு 300 காற்றாடிகளை பறக்கவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
மூன்று அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காத்தாடிகள் பறக்க விடப்படும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.