×

“திடீரென எல்லாம் மாறிவிட்டது”... குழந்தை பிறந்தவுடன் இர்பான் பதிவிட்ட போஸ்ட்

 

பிரபல யூடியூபர் இர்பானுக்கு, அவர் அறிவித்தபடியே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.


யூடியூபர் இர்பான் உணவுகளை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு இணையத்தில் பிரபலமானவர். உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று புட் ரிவ்யூ செய்து வரும் இர்பான் சமீபத்தில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவர் கடந்தாண்டு ஹசீஃபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் நடந்த நிலையில் ஹசீஃபா தற்போது கர்ப்பமாக உள்ளார்.  இந்த சூழலில் இர்பான் துபாய்க்கு மனைவியை அழைத்து சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டதோடு  அதனை தன் நண்பர்களுடன் இணைந்து இதை கொண்டாடியுள்ளார். இதற்கான வீடியோவை அவர் தனது யூட்யூப் சேனலில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உடனே இர்பான் சம்பந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்ததுடன், இச்செயலுக்காக மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில் யூடியூபர் இர்பான்- ஹசீஃபா ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கைவிரலுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள இர்பான், “திடீரென எனது வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்டது. என் இளவரசி இங்கே இருக்கிறார். எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. நான் என்ன நல்லது பண்ணேனு தெரியல.. எனக்கு இப்படி ஒரு சந்தோஷம் கிடைச்சிருக்கு.  என்னுடைய மகிழ்ச்சியை எல்லாம் என்னுடைய மனைவிக்கே திருப்பிக் கொடுக்கப் போகிறேன்.. இந்த அதிசயம் எங்கள் வீட்டில் கிடைத்ததால் எங்கள் குடும்பம் வளர்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.