×

2 ஆண்டுகளுக்கும் மேல் முறைகேடு- தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

 

திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லதா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லதா பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியையின் முறைகேடுகளை கவனிக்காத வட்டார கல்வி அலுவலர் மேரி ஜோசப்பினும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த முறைகேடு தற்போது தெரிய வந்துள்ளது. 


மாணவர்கள் எண்ணிக்கையை அதிகமாக காட்டி கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள், கூடுதலாக சத்துணவு பொருட்களை பெற்றதால் தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். 2 ஆண்டுகளுக்கும் மேலாக வருகை பதிவேட்டில் திருத்தம் செய்து ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பதாக முறைகேடு செய்துள்ளார் தலைமை ஆசிரியர் லதா. 230 மாணவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய நிலையில், 550 மாணவர்கள் என வருகை பதிவேட்டை திருத்தி மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.