×

உறுதியாகிறது பாஜக - பாமக கூட்டணி?

 

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இணையும் பாமக-வுக்கு 10 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ராமதாஸை சந்தித்து அன்புமணி நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் பாஜக கூட்டணியில் பாமக-வுக்கு 8 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  பாமக உடனான பேச்சுவார்த்தையை முடித்த பிறகு தேமுதிகவை அணுக இருப்பதாகவும் பாஜக தரப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.