×

இது பேர் தான் காதலா..?  காதலியை மடியில் வைத்து பைக் ஓட்டிய இளைஞர் கைது..!

 

பெங்களூரில் இளைஞர் ஒருவர் தன் காதலியைக் கவர்வதற்காக அவரை மடியில் அமர வைத்துக்கொண்டு, தலைக்கவசம் அணியாமல் அதிவேகத்தில் பைக்கை ஓட்டிச்சென்றார்.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிலர் பெங்களூரு காவல்துறைக்கு அந்தக் காணொளியைப் பகிர்ந்தனர்.

இதையடுத்து அந்தச் சாலையில் இருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் இளையரைக் கண்டுபிடித்த எலகங்கா காவலர்கள், அவரைக் கைது செய்தனர்.

விசாரணையில், 21 வயதான அந்த இளையரின் பெயர் சிலம்பரசன் என்பதும் அவர் ஒரு டாக்சி ஒட்டுநர் என்பதும் தெரியவந்தது.