140 கோடி இந்தியர்களால் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவது சாத்தியம் - பிரதமர் மோடி !
செங்கோட்டையில் 11 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் மழை சாரலுக்கு மத்தியில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது, ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. சுதந்திர தினவிழா உரையை ஜெய் ஹிந்த் என தொடங்கிய பிரதமர் மோடி, விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து கூறினார்.
சுதந்திர உரையில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது :-
இன்று செங்கோட்டையில் இருந்து எனது வலியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு சமூகமாக, நம் தாய்மார்கள், மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி நாம் மிகவும் நேர்மையாக சிந்திக்க வேண்டும். இதற்கு எதிராக நாட்டில் சீற்றம் நிலவுகிறது & இந்த சீற்றத்தை என்னால் உணர முடிகிறது
நமது சமூகம், நாடு மற்றும் மாநில அரசுகள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சமூகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த, பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரித்து, இந்த கொடூரமான செயல்களைச் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவது மிக முக்கியமானது.
இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவை. இதுபோன்ற செயல்களைச் செய்வது தூக்கு தண்டனைக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்துவது அவசியம்.
குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நாட்டை வலுப்படுத்தவும் பெரிய சீர்திருத்தங்களுக்கு நமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். நாங்கள் பெரிய சீர்திருத்தங்களை நாட்டில் கொண்டு வந்தோம். சீர்திருத்தங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பானது தற்காலிக கைதட்டல்களுக்காகவோ அல்லது நிர்பந்தங்களுக்காகவோ அல்ல, நமது நாட்டை வலுப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம்.
‘தேசம் முதலில்’ என்ற பொன்மொழியை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி சீர்திருத்தங்களுக்கான பாதையே வளர்ச்சியின் வரைபடமாகும் என்று பேசினார்.”நமது நாட்டின் இந்தச் சீர்திருத்தம், இந்த வளர்ச்சி, இந்த மாற்றம் என்பது விவாதக் கழகங்கள், அறிவுசார் சமூகங்கள் மற்றும் நிபுணர்களின் விவாதப் பொருளல்ல. அரசியல் நிர்ப்பந்தத்தால் நாங்கள் இதைச் செய்யவில்லை. எங்களிடம் ஒரே ஒரு தீர்மானம் உள்ளது. அது என்னவென்றால் நேஷன் ஃபர்ஸ்ட்” தேசமே முதன்மை என்று பிரதமர் மோடி கூறினார்.
தற்போது நடந்து வரும் ஆட்சியானது “பொற்காலம்” என்று கூறிய பிரதமர் மோடி, நாட்டில் வரம்பற்ற வேலை வாய்ப்புகள் இருப்பதாக வலியுறுத்தினார். இது நமது பொற்காலம், இந்த வாய்ப்பை வீணடிக்க விட முடியாது” என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்திய மருத்துவ மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்லும் சிரமங்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். பல நடுத்தரக் மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் மருத்துவக் கல்விக்காக “லட்சம் கோடி” செலவழிக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ இடங்களை கிட்டத்தட்ட 1 லட்சமாக உயர்த்தியுள்ளோம். அடுத்த ஐந்தாண்டுகளில் மருத்துவப் பிரிவில் 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்,
டெல்லி செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமங்கள் வரை 2.50 கோடி குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நமது நீதித்துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.
40 கோடி இந்தியர்களால் சுதந்திரம் சாத்தியமானது என்றால், 140 கோடி மக்களால் வளர்ந்த பாரதத்தை உருவாக்குவது சாத்தியம்.
2047 ஆம் ஆண்டில் வளர்ந்த பாரதம் என்பது வெற்று முழக்கம் அல்ல.140 கோடி இந்தியர்களின் கனவாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.