பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பட்டினப்பாக்கம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடந்து வருகிறது. சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று தமிழகத்தின் பல பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
Polyhose என்ற பல்வேறு வகையான பைப்புகள் தயாரிக்கும் சர்வதேச நிறுவன இயக்குநர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. சென்னை அபிராமபுரத்தில் உள்ள சபீர் யூசுப் வீட்டில் 3 வாகனங்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.