ஜல்லிக்கட்டு போட்டி - முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் 200 பேருக்கு அனுமதி
மதுரை ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை' முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் சுமார் 66 கோடியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஜல்லிக்கட்டில் அரங்கினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார். 66 ஏக்கரில் ரூபாய் 64 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் தற்போது கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானம் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன்முறையாக அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை | மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்கும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 250 மாற்றுத்திறனாளிகளுக்கு ஜல்லிக்கட்டை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.