×

பாஜக இல்லாத மற்ற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி - ஜெயக்குமார் பேட்டி

 

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இல்லாத மற்ற கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்தால் வரவேற்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்த பொறுத்தவரையில் திமுக ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், அதிமுக தரப்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். தேர்த்ல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நாளை சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், இன்று ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: நாளை முதல் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் சுற்றுப் பயணம் தொடங்குகிறது. அனைத்து பகுதிகளுக்கும் 10 பேர் கொண்ட குழு நேரில் சென்று கருத்துகளை கேட்டு பெறும். மக்கள் கருத்துக்களை அந்தந்த மாவட்ட ஊடகங்கள் வெளியிட வேண்டும். கருத்து தெரிவிப்பவர்கள் எழுத்துப் பூர்வமாக கருத்து தெரிவித்தால் நன்றாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இல்லாத மற்ற கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணி அமைத்தால் வரவேற்கப்படும் என தெரிவித்தார்.