×

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு - போலீஸ் தீவிர விசாரணை

 

சென்னையில் உள்ள நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்ரனர். 

சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் நடிகை சீதாவின் வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில், நடிகை சீதா வீட்டில் இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை. அதை யாரோ திருடிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனவே காணாமல் போன தனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தரும்படி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நகையை திருடியது யார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.