கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுக- கே. பாலகிருஷ்ணன்
போலி என்.சி.சி. முகாம் நடத்திமாணவியை பாலியல் வல்லுறவு செய்தகும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக என சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் செயல்படும்தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை(என்.சி.சி.) என்ற பெயரில் போலி முகாம் நடத்திய நாம்தமிழர் கட்சியைச் சார்ந்த சிவா என்கிற சிவராமன் 13 வயதுமாணவியை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளதும், இந்தமுகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்கள்செய்துள்ளதும் வன்மையான கண்டனத்திற்குரியது.
தனியார்ப்பள்ளி நிர்வாகம் ஆகஸ்ட் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரைமாணவிகளுக்கு தேசிய மாணவர் படை (என்.சி.சி) பயிற்சிமுகாம்கள் நடத்தியுள்ளது. இந்த போலி முகாமின்பயிற்சியாளரானநாம் தமிழர் கட்சியைச் சார்ந்த சிவராமன்என்பவர் 13 வயது மாணவியை மிரட்டி பாலியல் வல்லுறவில்ஈடுபட்டுள்ளார். அங்கிருந்த மாணவிகளுக்கும் பாலியல்சீண்டல்கள் செய்துள்ளார். இதுகுறித்து தலைமையாசிரியர்மற்றும் அங்கிருந்த ஆசிரியர்களிடம் பாதிக்கப்படடமாணவிகள் புகார் கொடுத்த போது பள்ளி நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்காமல் “வெளியே சொன்னால் கொலைசெய்து விடுவோம்” என்று மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டமாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு பின்னர் தனதுபெற்றோரிடம் தெரிவித்த பிறகே, பெற்றோர்கள்காவல்துறையிடம் புகார் அளித்ததன் காரணமாக இச்சம்பவம்வெளியே வந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட சிவராமன், தலைமையாசிரியர், தாளாளர் உள்ளிட்டு 11 பேர் மீதுபோக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிசிவராமன் போலியாக என்.சி.சி. ஆவணங்களை தயார்செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக கிருஷ்ணகிரி, தர்மபுரிமாவட்டங்களில் பல பள்ளி, கல்லூரிகளில் இதுபோன்றுமுகாம்கள் நடத்தி மாணவிகளுக்கும் பாலியல்துன்புறுத்தல்கள் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தீர விசாரித்து உரிய நடடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட ஆட்சி தலைவரிடமும் புகாரும்அளிக்கப்பட்டுள்ளது. எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் சிவராமன், அவருக்குஉடந்தையாக இருந்த பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள்மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறையினர்விரைந்து விசாரித்து உரிய தண்டனை வழங்கிட நடவடிக்கைஎடுக்க வேண்டுமெனவும், இந்த தனியார் பள்ளியை அரசேஏற்று நடத்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கேட்டுக் கொள்கிறது.
இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணைமேற்கொண்டு குற்றவாளிகளை மேலும் பலரை கைது செய்யஇவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடவேண்டுமெனவும் தமிழக அரசையும், காவல்துறையையும்இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடுமாநிலக்குழு வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.