×

பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறியது ஏன்?- கடம்பூர் ராஜூ விளக்கம்

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ  செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது பேசிய கடம்பூர் ராஜூ, “என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மையப்படுத்தியே தமிழக அரசியல் உள்ளது என்பதற்கு அடையாளம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அம்மாவின் புகை படத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து உள்ளனர். ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எல்லாம் அவரின் பெயர், படத்தை பயன்படுத்துகிறநிலைக்கு வந்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அரசியல் லாபத்திற்காக ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளனர். டிடிவிக்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அதிமுகவில் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே ஜெயலலிதாவின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த முடியும்.


தமிழர் நலன் சார்ந்த பிரச்சனைகளை பாஜக கண்டு கொள்ளவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம். அண்ணாமலைக்காக அல்ல, அண்ணாமலை எல்லாம்  எங்களுக்கு பொருட்டே அல்ல.தமிழர் நலம் சார்ந்த விரோத போக்கை பாஜக கடைபிடித்ததால் தான் தமிழக தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி உயரவில்லை. 12 கட்சிகளோடு கூட்டணி வைத்தும் 12 சதவீத வாக்கு வங்கியை கூட பாஜகவால் தாண்ட முடியவில்லை. அவ்வப்போது அரசியலில் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே சசிகலா ஏதேதோ பேசி வருகிறார்” என்றார்.