"நேதாஜி பிறந்த நாளில் அவர்தம் புகழைப் போற்றுவோம்" - கமல் ஹாசன், வானதி ட்வீட்
Jan 23, 2024, 11:55 IST
உண்மையில் நேதாஜியின் படை பலத்தை கண்ட ஆங்கிலேயர்கள் அஞ்சியது உண்மை இதுவே வரலாறு என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23 தேதி 1897 ஆண்டு இதே தினத்தில் பிறந்த உன்னத தலைவன்.#இரண்டாம்உலகப்போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர், உண்மையில் இவரின் படை பலத்தை கண்ட ஆங்கிலேயர்கள் அஞ்சியது உண்மை இதுவே வரலாறு என்று குறிப்பிட்டுள்ளார்.