×

விரைவில் இந்தியா கூட்டணியின் பட்ஜெட்... கமல்ஹாசன் ட்விஸ்ட்

 

மத்திய அரசின் 2024 பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்புக்கு என்று எந்த திட்டமும் இல்லை. கடந்த பத்தாண்டு பாஜக அரசின் பயணத்தை கூறி இருந்தாலும் அதிலும் பெரிதாக ஒன்றும் இல்லை. விவசாயிகளுக்கு நேரடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது என்று பெருமையாக கூறியுள்ள அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் சொந்த கால்களில் நிற்பதற்கான வாய்ப்புக்கள் இந்த பட்ஜெட்டில் உருவாக்கப்படவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

விவசாயப்பொருட்களின் ஆதார விலை போதுமான அளவு  உயர்த்தப்பட அடிப்படைகள் முன் வைக்கப்படவில்லை. கிராமப் புற 100 நாள் வேலைத் திட்டத்திற்கு  நிதி போதுமான அளவு ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக ,  மிகப்பெரிய அளவில் கிராமப்புற வேலை வாய்ப்பின்மை உள்ள போது, அதை நீக்கக் கூடிய திட்டங்களாக எதையும் பார்க்க முடியவில்லை.

வேலை வாய்ப்புக்களை பெருக்க எந்த உருப்படியான‌ திட்டமும் இல்லாத நிலையில் வேலை வாய்ப்புக்களுக்கு பயிற்சி என்பது பெரும் நிறுவனங்களுக்கு நன்மையாக தான் இருக்கும். அதைப்போலவே, வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பற்றி மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தாலும் சிறு தொழிலுக்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பாடாத நிலையில் அத்தகைய திறன் மேம்பாடு வெறும் வாய்ப்பந்தாலாகத் தான் இருந்திடும். தமிழகத்திற்கு ஏதுமில்லாதது ஏமாற்றமளிக்கிறது. 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசிய ஜனநாயக கூட்டணி பட்ஜெட்டுக்கு வாழ்த்துகள், விரைவில் இந்திய கூட்டணி பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.