×

ஜல்லிக்கட்டு தீர்ப்பு- ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி: கமல்ஹாசன்

 

தமிழகத்தில் 2007 ஆம் ஆண்டு பீட்டா அமைப்பு தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்யக்கோரி  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு தமிழக முழுவதும் உள்ள இடங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்களின் எழுச்சிப் போராட்டத்தால் அப்போதைய தமிழக முதலமைச்சர், இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பெருமையையும் உணர்ச்சியையும் மனதில் கொண்டு சட்ட சபையில் இதற்கான ஒரு தனி தீர்மானம் நிறைவேற்றி ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த அனுமதித்து அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. 

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின்…

— Kamal Haasan (@ikamalhaasan) May 18, 2023


தமிழக அரசால் இயற்றப்பட்ட இந்த சட்டம் செல்லாது என மீண்டும் பீட்டா அமைப்பு உச்சநதிமன்றத்தில் மனு செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதி அரசர்கள் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை யாரும் தடை போட முடியாது என்று தீர்ப்பளித்ததை பல்வேறு தரப்பினர் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கமல்ஹாசன், “தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஏற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீர்ப்பு, தமிழரின் கலாச்சாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம்.

இயற்கையோடும், விலங்குகளோடும் இணைந்து வாழும் தமிழக மக்களால் ஒருபோதும் கால்நடைகளுக்குத் துன்பம் ஏற்படாது என்பதை நாட்டின் தலைமை நீதிமன்றமே ஒப்புக்கொண்டதுடன், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு  தமிழ்நாட்டுக் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்றும் அங்கீகரித்துள்ளது பெருமைக்குரியது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக புரட்சிப் போராட்டம் நடத்திய இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும், உரிய ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, திறமையாக வாதாடி, சட்டப்போராட்டம் நடத்திய தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி!” எனக் கூறியுள்ளார்.