×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. குறிப்பாக சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை  (நவ.30) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.