×

த.வெ.க தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?- கனிமொழி பதில்

 

நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நல்ல நகைச்சுவை தான் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “திருமாவளவன் கூட்டணியில் விரிசல் இல்லை என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். தி.மு.க. கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. நாட்டின் மதச்சார்பின்மையை காப்பதுதான் எங்களின் முக்கிய கொள்கை. இந்தியா கூட்டணியை யாராலும் பிளவுபடுத்த முடியாது. வெற்றி வாய்ப்புகள் மற்றும் எதிர்ப்புகளை வலுவாக வெளிப்படுத்தக்கூடிய கூட்டணியாகும். இந்தியா கூட்டணி மிக வலிமையாக உள்ளது. எங்களுடைய தலைவர் சொல்வதைப்போல திமுக கூட்டணி என்பது கொள்கையில் உருவான கூட்டணி. இதற்கு ஒரே லட்சியம் இந்த நாட்டின் இறையாண்மை, நாட்டினுடைய மதச்சார்பின்மையை பாதுகாப்பது தான். அதனால் இந்தியா கூட்டணியை மாற்றி அமைப்பது என்பது கேள்வியே இல்லை.

கடந்த காலத்தில் திறமையான ஆட்சி நடத்தப்பட்டதால் தான் அதிமுக மீது விஜய் விமர்சனங்களை முன்வைக்கவில்லை என அதிமுகவினர் கூறிவருகின்றனர். நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நல்ல நகைச்சுவை தான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், அரசியலுக்கு வரலாம்” என்றார்.