×

நிபந்தனையை தளர்த்தக்கோரி கஸ்தூரி வழக்கு- அரசு பதிலளிக்க உத்தரவு

 

நடிகை கஸ்தூரி அளித்த நிபந்தனை தளர்வு மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு பதிலளிக்கக்கோரி வருகிற 2-ஆம் தேதி ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தெலுங்கு மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், எழும்பூர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் தினமும் காலை 10 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் அந்த நிபந்தனைகளை தளர்வு செய்யக்கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரி மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை இன்று மேஜிஸ்ட்ரேட் தயாளன் முன்பு வந்தது. அப்போது அரசு தரப்பு பதிலளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வருகிற 2ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார் மேஜிஸ்ட்ரேட் தயாளன்.