×

நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

 

நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவானார். முன்ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்துாரி  கைது செய்யப்பட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமின் வழங்க கோரி நடிகை கஸ்தூரி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.