×

பாடகி சுசித்ரா மீது கேரள நடிகை ரீமா கல்லிங்கல் புகார்

 

தமிழ் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவுக்கு எதிராக கேரள நடிகை ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார்.

பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேரள திரைத்துறையில் சில பெண்களுக்கு நடிகை ரீமா கல்லிங்கல் போதை விருந்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவியதும், இது மிகப்பெரும் விவாதமாக மாறியது. 

இந்த குற்றச்சாட்டுக்கு ரீமா கல்லிங்கல் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரள திரைத்துறையில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் பாடகி சுசித்ராமீது ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார். மேலும் மான நஷ்ட ஈடு கேட்டு, சுசித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் ரீமா கல்லிங்கல் நடவடிக்கை எடுத்துள்ளார். தன் மீதான, சுசித்ராவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, அப்படி எந்த நிகழ்வும் நடந்தது இல்லை என்றும் நடிகை ரீமா கல்லிங்கல் தெரிவித்துள்ளார். விசாரணை குழு விரைவில் இதற்கான அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ️