நாமக்கல்லில் சிக்கிய கேரள ஏடிஎம் கொள்ளை கும்பல்.. சினிமா பாணியில் சேஸிங்.. என்கவுன்ட்டரில் ஒருவர் பலி.. 

 
நாமக்கல்லில் சிக்கிய கேரள ஏடிஎம் கொள்ளை கும்பல்.. சினிமா பாணியில் சேஸிங்.. என்கவுன்ட்டரில் ஒருவர் பலி.. 
  கேரளாவில் ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்து தப்பிய கும்பல், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பிடிபட்டது.  துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையர்களை பிடித்ததில் ஒர்வுவர் உயிரிழந்தார்.   

கேரளாவின் திரிச்சூர் பகுதியில் ஏடிஎம்களில் ரூ. 65 லட்சம் வரை கொள்ளையடித்து தப்பிய முகமூடி கும்பல்,  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே  பிட்பட்டது.  கண்டெய்னர் லாரியில் தப்பிய கும்பல் குமாரபாளையம் அருகே பல வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்ற நிலையில், போலீஸார் விரட்டிப்பிடித்தனர். சினிமா பாணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் துரத்திச் சென்று கொள்ளையர்களை பிடித்தனர்.  

நாமக்கல்லில் சிக்கிய கேரள ஏடிஎம் கொள்ளை கும்பல்.. சினிமா பாணியில் சேஸிங்.. என்கவுன்ட்டரில் ஒருவர் பலி.. 

அப்போது,  கண்டெய்னரை திறக்கும் போது உள்ளே இருந்த கொள்ளையர்கள், போலீசாரை நோக்கி ஆயுதங்களால் தாக்கியதால்  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த  துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட, ஒருவர் காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் அனுமதி எனவும் தகவல். மேலும் சிலர் பிடிபட்டுள்ளனர்  பிடிபட்ட 5 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன்  கண்டெய்னர் உள்ளே கட்டுக்கட்டாக பணம்,  பதிவு எண் இல்லாத ஹூண்டாய் கிரெட்டா கார் கார், ஏடிஎம் இயந்திரம் இருந்துள்ளன.  

 கொள்ளையர்கள் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல் வெளியான நிலையில்,  பிடிபட்டவர்கள் ஹரியானாவின் மேவாட் கொள்ளை கும்பல் என தெரியவந்துள்ளது.   தகவல் அறிந்து கேரள தனிப்படை போலீசார் நாமக்கல் விரைந்துள்ளனர்.  அத்துடன் துப்பாக்கிசூடு நடந்த இடத்தில் சேலம் டி.ஐ.ஜி., நாமக்கல் எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இந்த கும்பல் தென்னிந்தியாவில் கடந்த 6 மாதத்தில் 15க்கும் மேற்பட்ட ஏடிஎம்களில் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்துள்ளது.