×

18ம் படியில் குரூப் போட்டோ...கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

 

சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதேபோல் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த போலீசார் ஏராளமானோர் சபரிமலை 18ம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகிய நிலையில், கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல் அந்த காவல்ர்களுக்கு ஆயுதப்படை முகாமில் நன்னடத்தை பயிற்சி அளிக்க அம்மாநில டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.