×

அமைச்சராக சிறப்பாக பணியாற்றியதால் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி- கொங்கு ஈஸ்வரன்

 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், “அமைச்சராக விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த உதயநிதி ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட், கேலோ போட்டிகள் மற்றும் கிராமப்புற வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தி அவர்களினதிறமைகளை வெளிக்கொணர்ந்து இதுவரை இல்லாத அளவு விளையாட்டுத்துறை மேம்படுத்தியவர். அவரின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பரிசாக, முதலமைச்சர் அவருக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்கி உள்ளார். தமிழ்நாடு மக்களின் நலனுக்காக முதலமைச்சரின் தோளோடு தோள் நின்று உதயநிதி செயல்படுவார். அவருக்கு வாழ்த்துகள்.

 
அதே போல் கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்பட்ட செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பதற்கு வரவேற்கதக்கது. புதிதாக பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்” என்றார்.