கோவை செல்வராஜ் திடீர் மரணம்! திமுக தொண்டர்கள் அதிர்ச்சி
Updated: Nov 8, 2024, 20:12 IST
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் காலமானார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 66. திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தார். இன்று காலை தான் அவரது இளைய மகனின் திருமணம் முடிந்த நிலையில், மாலையில் மாரடைப்பால் உயிரிழந்தார். நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.