×

சோற்றை வடிக்கும் போது வடிகஞ்சி உடலில் கொட்டியதில் இளம்பெண் பலி

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அடுப்பில் இருந்த சோற்றை வடிக்கும் போது வடிகஞ்சி உடலில் கொட்டியதில் வடமாநில இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிதாஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார் இவருடைய 16 வயது மகள் நந்தினி கடந்த 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஸ்டவ் அடுப்பில் இருந்து சோற்றை வடிக்கும்போது, எதிர்பாராதவிதமாக கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடலில் கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து நந்தினி அவரை பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வடமாநில குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.