இனி தான் விளையாட்டு ஆரம்பம்! என் தம்பி விஜய்க்கு அட்வைஸ் தேவையில்லை- குஷ்பு பேட்டி
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நடிகை குஷ்பு பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி விலக எந்தவொரு அழுத்தமும் காரணம் இல்லை. பதவி விலகுவது என்பது 8 மாதங்களுக்கு முன்பே எடுத்த முடிவு. புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் என் தம்பி விஜய்க்கு அட்வைஸ் தேவையில்லை. எங்கிருந்தாலும் வாழ்க. தம்பி விஜய், அரசியலில் மாற்றம் கொண்டுவருவாரா என 2026ல் தான் தெரியும்.
இதுவரை கட்சி சார்பாக பேச முடியாத நிலையில் இருந்த போதே இவ்வளவு பேசி இருக்கிறேன். இப்போது அந்த பதவியில் இல்லாமல் கட்சிக்காக பேச போகிறேன். எப்படி பேசுவேன் என்று பாருங்கள். மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம் இருக்கும். என்னை பார்த்தால் நடுங்குகிறார்கள், அந்த நடுக்கம் இருக்கட்டும். இனிமேதான் விளையாட்டு ஆரம்பிக்கப் போகிறது” என்றார்.