கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவை நடத்தியது மத்திய அரசா? தமிழக அரசா?- எல்.முருகன்
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா அரசியலுக்கு அப்பாற்பட்டது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, “தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில், ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். ஒன்றிய அரசு என அரசியலுக்காக திமுகவினர் கூறி வருகின்றனர். தமிழக அரசின் விழாவில் மத்திய அமைச்சர் கலந்துக்கொண்டுள்ளார். கலைஞர் நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதை அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையோடு பார்க்க வேண்டும். இதில் அரசியலுக்கு இடமில்லை. நேற்று நடைபெற்ற கலைஞர் நாணய வெளியீட்டு நிகழ்ச்சி முழுக்க முழுக்க மாநில அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி தான். மத்திய அரசு கலைஞர் நாணயம் வெளியீட்டுக்கு அனுமதி வழங்கியது. திமுக- பாஜக இடையே ரகசிய கூட்டணி என்றே பேச்சுக்கே இடமில்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறது மாநில அரசு.
மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும். மாநில அரசுகள் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் எந்த விதத்திலும் சகித்துகொள்ள முடியாது. மருத்துவர்கள் ரோட்டிற்கு வரும் அளவிற்கு அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” என்றார்.