×

தொழிலாளர் தோழர்களுக்கு மே தின வாழ்த்துகள் - ஜி.கே.வாசன் 

 

மே தினத்தை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதால் தொழிலாளர்கள், உழைப்பாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும். குறிப்பாக மத்திய மாநில அரசுகள் மே தினத்தை கொண்டாடும் வேளையில் தொழிலாளர்களின்
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களைகொண்டுவந்து செயல்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் சிறு, குறு விவசாயிகள், சாலையோர வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் சுமார் 43.70 கோடி பேர் உள்ளனர் என்கிறது தொழிலாளர் நலத்துறை. 

எனவே அனைத்து விதமான தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கான சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்திய மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும். மே தினத்தின் உரிமையே தொழிலாளர்களை வாழ வைத்து, அதன் மூலம் தொழில்கள் பெருகி, மாநிலமும், நாடும் முன்னேற வேண்டும் என்பது தான். எனவே தொழிலாளர்களின் உழைப்பை மையமாக வைத்து தொழில்களும், நாட்டு மக்களும், நாடும் முன்னேறுகிறது என்பதால் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக தமிழ் மாநில காங்கிரஸ் செயல்படுகிறது. மே தினத்தை ஒட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தொழிலாளர் தோழர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.