×

திமுக எம்.பி.க்கள் கூட்டத்தின் தீர்மானங்கள் இதோ!! 

 

இண்டியா கூட்டணியோடு இணைந்து குரல் எழுப்புவோம் என்று  திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நடைபெற்றது. முதல்வரும்,  திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்ற நிலையில் பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது. 

  • உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு சேர வேண்டிய நீரை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ்நாடு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்திட வேண்டும்
  • நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதலை அளித்திட தொடர்ந்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்ப வேண்டும்
  • நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் 33 விழுக்காடு மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்
  • மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி முழு ஒதுக்கீட்டை செயல்படுத்திடவும், பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள க்ரீமிலேயரை 25 லட்சமாக உயர்த்த வேண்டியும் கோரிக்கையை எழுப்ப வேண்டும்
  • உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள்நியமனத்தில் சமூகநீதி அடிப்படையில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும்
  • பாஜக அரசால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “விஸ்வகர்மா யோஜானா” திட்டம் குலத்தொழிலை மேலோங்கச் செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி என்பதால் இத்திட்டத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டும்

​​​​​​​

இந்தியா கூட்டணிக்கு பயந்து  பாரத் என்று நாட்டின் பெயர் மாற்றுவதிலேயே உன்னிப்பாக இருக்கிறது பாஜக அரசு . தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முற்றிலும் தோல்வியுற்ற ஒன்றிய பாஜக அரசின் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து எதிர் கொண்டு இந்திய ஜனநாயகத்தை காத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது