×

வேற்றுமை, ஏற்றத்தாழ்வு காணாத சமத்துவ நெறி போற்றுவோம் - முதல்வர் ஸ்டாலின்..!

 

வள்ளலார் ராமலிங்க அடிகள் பிறந்த நாளை ஒட்டி “உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்” என  தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

‘வள்ளலார்’ராமலிங்க அடிகளாரின் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 5) கொண்டாடப்படுகிறது. சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவரும், பசிப்பிணி போக்க பாடுபட்ட ஞானியுமான வள்ளலாரின் பிறந்த நாளை, ‘தனிப்பெருங்கருணை நாள்’ஆக கொண்டாடப்படும் கடந்த 2021ம் ஆண்டு  தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி  வள்ளலார் பிறந்த நாளான இன்று ‘தனிப்பெருங்கருணை நாள்’கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் வள்ளலார் பிறந்தநாளையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "தனிப்பெருங்கருணை நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று.  “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!” “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்! உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்! வாழ்க வள்ளலார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.