×

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற அனுமதி!

 

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.  

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மது அருந்துதல், புகை பிடித்தல் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுமானத்தை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று மதுபானங்களை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.