×

நாகையில் 2 வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை...!

 


நாகை, கீழ்வேளுர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு   விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் நடைபெறுவது வழக்கம்.  அந்தவகையில் இன்று ( ஆகஸ்ட் 29) வேளாங்கண்ணி ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு திருவிழா நடைபெறவுள்ளது.  

இதனையொட்டி நாகை மற்றும் கீழ்வேளூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 21ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் இந்த  உத்தரவினை பிறப்பித்துள்ளார்.