×

நாடாளுமன்ற தேர்தல்:  நாம் தமிழர் கட்சியின் கரூர் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு.. 

 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கரூர் தொகுதி வேட்பாளரை  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

அடுத்த ஆண்டு(2024)  ஏப்ரல் - மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேசிய கட்சிகள் தொடங்கி மாநில கட்சிகள் வரை அனைத்து தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் சூடுபிடிக்க, தனித்து களம் காணும் கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தில் தொடர்ந்து தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி ,  கரூர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்துள்ளது.  

கரூரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  கடந்த முறை கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட கருப்பையா என்பவரையே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிப்பதாக தெரிவித்தார்.  மேலும், பொதுமக்களிடம் கருப்பையாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று  அவர் வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளையும் முந்தி  முதல் வேட்பாளரை நாம் தமிழர் கட்சி அறிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.