நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி
Oct 31, 2024, 19:53 IST
நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது.
நவம்பர் முதல் வார இறுதியில் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் நவம்பர் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, மதுரை, சேலம், கன்னியாகுமரி, ராசிபுரம், வேதாரண்யம், கும்பகோணம், கடலூர், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை அவ்வப்போது பெய்துவருகிறது.