×

மதுரை  சித்திரை திருவிழா எப்போது? கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரராஜ பெருமாள்  என்றழைக்கப்படும் கள்ளழகர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன[1][2][3][4][5]. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த ஊரான தேனூர் இல் ஆற்றில் இறங்கும் விழா, வெகுகாலமாகவே நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில்  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  மீனாட்சி திருக்கல்யாணம் ஏப். 21ம் தேதி நடைபெறுகிறது. ஏப். 23ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.