சமத்துவத்தையோ, சமய சார்பின்மையையோ யாரும் நீக்க முடியாது - சு.வெங்கடேசன்
Nov 26, 2024, 12:00 IST
அரசியலமைப்பு சட்டத்தை போற்றி பாதுகாப்போம் என மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவில் 'சோசலிசம்' என்ற கருத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் ஒரு பொதுநல அரசைக் குறிக்கிறது. என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்களின் உத்தரவு அரசியலமைப்புச் சாசன தினத்தின் 75 வது ஆண்டின் மைல்கல் .
இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்தோ , மக்களின் மனங்களில் இருந்தோ சமத்துவத்தையோ, சமயச் சார்பின்மையையோ யாரும் நீக்க முடியாது. அவை வெற்றுச் சொற்கள் அல்ல, இந்த தேசத்தின் வேர்கள். அரசியலமைப்புச் சட்டத்தை போற்றிப் பாதுகாப்போம் என குறிப்பிட்டுள்ளார்.