×

கேலோ இந்தியா - பதக்க பட்டியலில் மகாராஷ்டிரா அணி முதலிடம்

 

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் சென்னை நேரு பார்க் ஸ்குவாஷ் அகடாமியில் நடைபெற்ற போட்டியில் ஸ்குவாஷ் அணிக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. ஆண்கள் அணி உத்தரப்பிரதேசம் அணியை 2-0 என்ற கணக்கிலும் , பெண்கள் அணி 2-0 என்ற கணக்கிலும் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தி தங்கம் வென்றனர். 

சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற தடகள போட்டிகளில் மகளிர் 800 மீ பிரிவில் கன்னியாகுமரியை சேர்ந்த தமிழ்நாடு வீரங்கனைகள் அன்சிலின், அக்சிலின் இரட்டையர் சகோதரிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தினர். கட்டட தொழிலாளியின் மகள்களான இவர்கள் மண் தரையில் பயிற்சி மேற்கொண்டு முதல் முறை சர்வதேச தரத்திலான மைதானத்தில் இருவரும் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தனர். மழை காலங்கள் மண் மைதானங்கள் பாதிக்கப்படுவதால் 60 கி.மீ  தூரம் பயணம் மேற்கொண்டு பயிற்சி மேற்கொள்வதால் தங்களது கிராமத்திற்கு அருகாமையில் சின்தட்டிக் மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேபோல் உயரம் தாண்டுதலில் தமிழ்நாடு வீரர் தருண் விகாஷ் தங்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டியில் முதல் பெறும் முதல் பதக்கமே தங்க பதக்கமாக இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மும்முனை தாண்டுதல் போட்டியில் பாவினா ராஜேஷ் தங்க பதக்கமும் பமிலா வர்ஷினி வெள்ளி பதக்கமும் வென்றனர். 100 மீ ஒட்டத்தில் ஆண்கள் பிரிவில் கோகுல், மகளிர் பிரிவில் அபிநயா ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். டிராக் சைக்கிளிங் மகளிர் கெய்ரின் பிரிவில் வெண்கலம் வென்றார் தமிழ்நாடு வீராங்கனை தமிழரசி, நேற்று 10 கிலோ மீட்டர் டிராக் சைக்கிள் பிரிவில் தங்கம் வென்றிருந்தார் தமிழரசி இந்த தொடரில் மொத்தம் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.


கூடைப்பந்தில் தமிழ்நாடு ஆடவர் மற்றும் மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி தமிழ்நாட்டிற்கு பதக்கம் உறுதி செய்துள்ளது. வாலிபால் போட்டிகள் இன்று தொடங்கியுள்ள நிலையில் முதல் லீக் போட்டியில் மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி குஜராத் அணியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ச்சியது. ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி தமிழ்நாடு  அணி ஹரியான அணியை 3-2 என்ற செட் கணக்கில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பதக்க பட்டியலில் மகாராஷ்டிரா அணி முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி ஹரியானா அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாடு அணி 3-வது இடத்திற்கு சென்றுள்ளது.