×

“இதற்காகவே மகாவிஷ்ணுவை அழைத்தேன்... தவறு நடந்துவிட்டது”- தன்னார்வலர் வாக்குமூலம்

 

சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் ஆகிய இரண்டு பள்ளிகளுக்கும் மகாவிஷ்ணுவை நேரில் அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடமும் நேரில் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தன்னார்வலரான காமாட்சி என்பவர் தான் மகாவிஷ்ணுவை அழைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தன்னார்வலரான காமாட்சியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல முறை மாணவர்களுக்கு உணவு போன்ற பல்வேறு உதவிகளை செய்திருப்பதாகவும், நல்லெண்ணத்தில் தான் மகா விஷ்ணுவை அழைத்ததாகவும் காமாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார். மகாவிஷ்ணுவின் அனைத்து வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்த போது சுமார் 10 லட்சம் வரை பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த பணம் வந்த வழிகள் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இன்றுடன் 3 நாள் போலீஸ் காவல் முடிவடைவதால் மாலை 4 மணிக்கு மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக போலீசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24ஆம் தேதி அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. பள்ளி மேண்மை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தன்னம்பிக்கை பேச்சாளர் பங்குபெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறி அனுமதி பெறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஊக்கமுட்டும் வகையில் ஏற்கனவே பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி இருப்பதும்,  அது போன்று நல்லெண்ணத்தில் தான் மகாவிஷ்ணு அவர்களையும் சொற்பொழிவாற்ற பரிந்துரைத்தாகவும், ஆனால் தவறு நடந்துவிட்டதாக காமாட்சி வருத்தம் தெரிவித்துள்ளார்.