×

சிறையிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவேன்- மகாவிஷ்ணு

 

சிறையிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவேன் என மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.   மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக,  ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன்   பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் அவமதிக்கும் வகையில் மகாவிஷ்ணு பேசியிருந்தார்.  

இதையடுத்து மகாவிஷ்ணுவை கைது செய்த போலீசார், சென்னை மற்றும் திருப்பூரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகாவிஷ்ணு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “சினிமாவில் தோற்றதால் ஆன்மீக சொற்பொழிவாளராக ஆகினேன். சிறையிலும் ஆன்மீக சொற்பொழிவு நடத்துவேன்.பெற்றோர் - ஆசிரியர் சங்க நிதிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை அளித்தேன். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி சொற்பொழிவு ஏற்ற அழைத்தார். சென்னை அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி சொற்பொழிவு ஆற்ற அழைத்தார்” எனக் கூறியிருக்கிறார்.