நடிகர் மாரிமுத்து மரணம் - செல்வப்பெருந்தகை இரங்கல்!!
சின்னத்திரையில் ஒளிப்பரப்பிய எதிர்நீச்சல் நாடகத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராகவே மாறியிருந்தார் என்று நடிகர் மாரிமுத்துவின் மறைவு குறித்து செல்வப்பெருந்தகை உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் இறப்பு செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் வெகு இயல்பாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சின்னத்திரையின் நாடகத்தின் மூலம் மக்களிடம் மிகுந்த அறிமுகம் ஆனவர்;. இயக்குநர், நடிகர் என்று அறியப்பட்ட நிலையிலும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர்.
அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினர்கள், நடிக கலைஞர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.