×

மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு ஈபிஎஸ் மரியாதை

 

 மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைகளுக்கு ஈபிஎஸ்  மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்.

மருது சகோதரர்களின் 222 வது நினைவு தினம் கடந்த 27 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார் கோவிலில் அமைந்துள்ளது

இந்நிலையில் மதுரை தெப்பக்குளம் மருது சகோதரர்கள் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வின் போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.