×

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! 

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து வைகோ சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு எலும்பு முறிவுக்காக அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது வைகோவுக்கு வலது தோல்பட்டை எலும்பில் பிளேட் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். 

இந்த நிலையில், வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக எம்.பி. துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார். அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.