×

6 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் அளிக்க மதிமுக முடிவு!

 

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் 6 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் அளித்து 2 தொகுதிகளை கேட்க மதிமுக திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பிப்.4ஆம் தேதி திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மதிமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது.   திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குழு அமைத்துள்ளது. ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் -கழக அவைத் தலைவர்,  மு.செந்திலதிபன் -கழகப் பொருளாளர், ஆவடி இரா.அந்திரிதாஸ், அரசியல் ஆய்வு மைய செயலாளர், வி.சேஷன், தேர்தல் பணிச் செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் 6 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் அளித்து 2 தொகுதிகளை கேட்க மதிமுக திட்டமிட்டுள்ளது. அதாவது விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகியவை மதிமுகவின் விருப்பத் தொகுதிகள் ஆகும்.  6 தொகுதிகளில் இரண்டு இடங்களை வழங்கும்படி திமுகவிடம் வலியுறுத்த மதிமுக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில்| இந்தமுறை பம்பரம் சின்னத்தில் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.