×

#MDMK மதிமுக எம்பி கணேசமூர்த்தி காலமானார்!

 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரான கணேசமூர்த்தி, மார்ச் 24ம் தேதியன்று காலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, அவரது உறவினர்கள் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கே முதற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்ட பிறகு, உயர் சிகிச்சைக்காக கணேசமூர்த்தி, உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை 5.15 மணிக்கு காலமானார்.