×

#BJP களத்தில் என்னை சந்தியுங்கள்- தயாநிதிமாறனுக்கு சவால் விட்ட வினோஜ் P.செல்வம்

 
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் வினோஜ் P.செல்வம்.
இவரை எதிர்த்து திமுக சார்பாக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார்.
இன்றைய வேட்பு மனு பரிசீலணையின் போது பாஜக வேட்பாளர் வினோஜ் P. செல்வத்தின் வேட்புமனுவில் பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளது என்று திமுகவினர் கடுமையாக குற்றம் சாட்டினர்.
இதனிடையே பிரச்சாரத்தில் இருக்கும் வினோஜ் தனது எக்ஸ் வலைதள பக்கம் மூலமாக, திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வேட்பு மனு பரிசீலனை அறையில் அமர்ந்திருக்கும் தயாநிதி மாறன் புகைப்படத்தை வெளியிட்டு, அவருக்கு சவால் விட்டுள்ளார்.
அந்தப் பதிவில்,"அண்ணன் தயாநிதி மாறன் அவர்களே, என்னை களத்தில் சந்தியுங்கள்.. இந்த ஏசி அறையில் நீங்கள் உட்கார்ந்து இருக்கும் இந்த நேரத்தில் நான் 77 வது வார்டில் பிரச்சாரத்தை முடித்து விட்டேன். இந்த வார்டில் உங்களை பொதுமக்கள் உள்ளேயே விட மாட்டார்கள்.. " என்று பதிவிட்டுள்ளார்.