×

"மாதவரம் - எண்ணூர் வரை" புதிய மெட்ரோ ரயில் வழித்தடம்!!

 

புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

சென்னை மெட்ரோ திட்டத்தின் 2-ம் கட்ட பணிகளுக்கு பொது முதலீட்டு வாரியம் (PIB) ஒப்புதல் அளித்து 3 ஆண்டுகளாகியும்,  மத்திய அரசின் பங்கான  ரூ.7,425 கோடியை இதுவரை  மத்திய அமைச்சரவைக் குழு  வழங்கவில்லை . பொது முதலீட்டு வாரியம் சென்னை மெட்ரோ திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கு 17.08.2021 அன்று ஒப்புதல் அளித்ததும் பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இதுவரை நிதி வழங்காமல் இருப்பது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. நிதி ஒதுக்க தொடர்ச்சியாக பிரதமரிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தும் நிதி கிடைக்காததால், ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் மாநில நிதியில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் சென்னை மாதவரம்-எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.  மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரிசிப்காட், பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் 2ம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்படுகிறது. சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது.