வரும் 28ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு
Sep 16, 2023, 21:01 IST
தமிழகத்தில் வரும் 28ம் தேதி பிறை தென்பட்டால் மிலாது நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இறை தூதர் முகமது நபிகள் பிறந்த தினத்தை மிலாது நபி விழாவாக மகிழ்ச்சியுடன் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது . முகமது நபிகள் அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மக்களிடம் அவருடைய எளிமையான உறையாடல்கள் மூலம் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுசேர்த்த பெருமையக்கு உரியவர்.
அந்தவகையில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் புனித நாளான ’மிலாடி நபி’ அன்று மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெறும் என்றும், வரும் 28 ஆம் தேதி பிறை தென்பட்டால் மிலாது நபி கொண்டாடப்படும் எனவும் தலைமை காஜி அறிவித்துள்ளார்.