×

10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர்- அன்பரசன் உறுதி

 

இன்னும் ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படலாம் என  அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற்ற நிலையில், வரும் 28-ம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. மேலும் அனைத்து கட்சித் தலைவர்களும் மேடையில் பங்கேற்றவாறு பொதுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.  இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வெ.வேலு, பொன்முடி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு,  துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திமுக எம்.பி., திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இந்த ஆலோசனைக்கூட்டத்தில் திமுகவின் தேர்தல் இலக்கு , பவள விழாவை சிறப்பாக நடத்துவது, உதயநிதியை துணை முதல்வராக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோக்கப்பட்டது. 

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் உண்மையிலேயே,  நிச்சயமாக துணை முதல்வராக, உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்பார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது பற்றி இன்னும் ஒரு வாரதத்தில் ஏன் நாளையே கூட அறிவிப்பு வெளியாகலாம்” என்றார்.