×

ஜே.இ.இ முதன்மை தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழக மாணவர் - அமைச்சர் வாழ்த்து!

 

ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ள முகுந்த் பிரதீஷ் என்ற மாணவருக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் நாடு முழுவதும் 11 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள்.